நாடு முழுவதும் கொரானா நோய் தொற்று காரணமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று கழகத் தலைவர் தளபதிஸ்டாலின அறிவித்திருந்தார்.
மேலும் திமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய நிதியிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தி௫ந்தார்.
அவரது ஆணையை ஏற்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் முதல் தவணையாக கொரானா வைரஸ் பரவலை எதிர் கொள்வதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பரிந்துரை கடிதம் வழங்கனார்
உடன் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன்.
" alt="" aria-hidden="true" />