" alt="" aria-hidden="true" />
சென்னை:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 19வது நாளாக, இன்றும் (ஏப்., 03) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கடந்த மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 18வது நாளாக இன்றும் (ஏப், 02) எந்த மாறுதலும் செய்யபடவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 19வது நாளாக, இன்றும் (ஏப், 03) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.