" alt="" aria-hidden="true" />
விருகம்பாக்கம் தொகுதி காணு நகர் பகுதியில் தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை V.N.ரவி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை நேரிடையாக வீதி வீதியாக சென்று ஆய்வு செய்தார். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டார் மற்றும் வீதியில் எந்த பொறுப்பும் இல்லாமல் திரிந்து கொண்டு இருந்தவர்களை அழைத்து நோயின் தாக்கத்தை எடுத்து சொல்லி அவர்களை வீட்டிலேயே இருக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டு அரசுக்கும் பொதுமக்களுக்கும் நீங்கள் உதவ வேண்டும் என்று கூறி அவர்களுக்கு முககவசங்களை அணிவித்து விட்டார்.